Who is Amt.Dr. K. Senka Senthilkumar, B.A., LLB., ?
யார். டாக்டர் கே. செந்கா செந்தில்குமார், பி.ஏ., எல்எல்பி.,?
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள்.
அன்புடையீர், வணக்கம்!
மேற்கூறிய குறளுக்கு என்ன அர்த்தம் என்றால்..
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
மனிதர்களில் ஒரு சிலர் தனக்காக வாழ்கிறார்கள்; ஒரு சிலர் பிறர் நன்மைக்காகவே வாழ்கிறார்கள்.
டாக்டர். கே. செந்தில் குமார்
செந்கா குழுமத்தின் தலைவரும் உலக சாதனையாளருமான டாக்டர். கே. செந்தில் குமார் அவர்கள் இரண்டாவது வகையை சார்ந்தவர்.
“காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்” என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப சுழன்று ஓடும் காலச்சக்கரம் அறிமுகப்படுத்தும் எத்தனையோ நல்ல மனிதர்களில் இன்றைய காலச் சக்கரம் உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு நல்ல மனிதர் செந்கா குழுமத் தலைவர் டாக்டர். கே. செந்தில்குமார் அவர்கள்
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவர்களை
சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்
ஏழை எளிய நடுத்தர மக்களின் கனவுகள் ஆசைகள் எதுவாக இருக்க முடியும் தனக்கு ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் என்பதுதான் இந்த கனவை நிறைவேற்ற இவர் எடுத்துள்ள முயற்சி பாராட்டப்பட வேண்டிய விஷயம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி குலுக்கல் முறையில் ஒரு ரூபாய் 100 ரூபாய் என்ற தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை எளிய மக்களை வீட்டுமனை வாங்க ஊக்கப்படுத்தி இன்றைக்கு 10,000 பேருக்கு வீட்டுமனை கொடுத்திருக்கிறார்.
மேலும் இவரது நிறுவனத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2000 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான களப் பணியாளர்களின் கனவு மனிதர் இவர். ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் உற்சாக மனிதர் இவர். உழைத்தால் உயரலாம் என்ற அடையாளச் சின்னம்இவர்.
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்
என்ற கூற்றின் படி இவர் தொட்ட துறைகளிலெல்லாம் வெற்றி என்ற மாமனிதர் இவர். மேலும் இவர் அனாதை இல்லங்களுக்கு ஆதரவு அளிப்பவர், முதியோர் இல்லங்களுக்கு முட்டு கொடுப்பவர். இவர் தன்னை முழுமையாக சமூக சேவை ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவு இவரது சாதனைகளை, சமூக சேவைகளை அசுர வளர்ச்சியைப் பார்த்து வியந்த இரு பெரிய அமைப்புகள் இவருக்கு சிறந்த சமூக சேவைக்கான உயர்ந்த விருதினை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சொந்த வீடு
இவரது கனவு ஆசை லட்சியம் எல்லாமே 2025 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சொந்த வீடு என்ற அடிப்படையில் ஒரு லட்சம் மக்களுக்கு எளிய சுலப தவணையில் வீட்டு மனை வழங்க வேண்டும் என்பதை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். குடும்பத்திற்கு ஒரு மனை என்ற திட்டத்தின் அடிப்படையில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இவரது சமூக சேவையை ஆராய்ந்து பார்த்தால் ஒரு வீட்டு மனைக்கு நான்கு மரங்கள் நட முடியும் என்றால் பத்து லட்சம் வீட்டு மனைகளுக்கு 40 லட்சம் மரங்கள் உருவாகி இருக்கும்.
இவர் அடிக்கடி கூறிக்கொள்வது:-
முடிவுரை
நிரூபிக்கும் வரை நிராகரிக்க படுவாய்
நிரூபித்த பின் நிர்ணயிக்க படுவாய்
ஆம்! இன்று இவர், தன்னை யார் என்று நிரூபித்துள்ளார்! இந்த மாமனிதரின் வெற்றி கதைகள் நிறைய உள்ளது. ஒவ்வொன்றும் பெரிய சாதனை! அதனை பின்வரும் கட்டுரைகளில் நாம் பார்ப்போம்.